HinduPost is the voice of Hindus. Support us. Protect Dharma

Will you help us hit our goal?

HinduPost is the voice of Hindus. Support us. Protect Dharma
13.3 C
Badrinath
Saturday, June 10, 2023

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, காஜியாபாத்தில் சந்தை சாலையில் ஸ்டால்கர் பெண்ணைக் குத்திக் கொலை செய்தார்

19 வயதே ஆன நைனா கவுர் தனது பெற்றோருடன் ஷாப்பிங் சென்றிருந்த போது காசியாபாத்தில் ஷெரு கான் என்பவனால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியின் படி –

“தனது பெற்றோருடன் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த 19 வயது பெண், காசியாபாத் மாவட்டத்தின் டிலா மோர் பகுதியில் உள்ள மார்க்கெட் அருகில் நடு ரோட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் மறுநாள் காலை உயிரிழந்தார்.

துளஸி நிகேதன் பகுதியில் உள்ள விவேக் விஹாரில் தனது பெற்றோர் பல்தேவ் சிங் மற்றும் நீலம் கவுருடன் வசித்து வந்த நைனாவுக்கு திருமணமான ஒரு சகோதரி இருக்கிறார். பள்ளிப் படிப்பு முடிந்த பின் டெல்லியில் செவிலியர் பயிற்சி படிப்பைத் தொடர்ந்த நைனாவுக்கு ஜூன் 22 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணி வாக்கில் மார்க்கெட்டில் சிம் கார்டு வாங்கிக் கொண்டு அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, “சில்லி பொட்டேட்டோ சாப்பிட வேண்டும் என்று விரும்பிய நைனா அவளது அம்மாவுடன் ஒரு சீன உணவுக் கடைக்கு சென்றாள். நான் வீட்டுக்கு செல்லலாம் என்றெண்ணி திரும்பினேன். ஒரு 50 மீட்டர்‌ தூரம் தான் சென்றிருப்பேன். அப்போது ஒரு‌ பைக்கில் மூன்று பேர் வந்தனர். அதில் முகத்தை முகக் கவசத்தால் மறைத்திருந்த ஒருவன் நைனாவின் கையைப் பிடித்து இழுத்து அடித்ததில் அவள் கீழே விழுந்து விட்டாள். மகளைக் காப்பாற்ற சென்ற என் மனைவி அவன் அறைந்ததில் மயக்கமாகி விட்டாள்.” என்று ஒரு தனியார் நிறுவனத்தில் கிளர்க்காக பணி புரிந்து வரும் நைனாவின் தந்தை கூறியுள்ளார்.

“அந்த மூவரில் ஒருவன் என்னை என் மனைவி மற்றும் மகளுக்கு அருகில் செல்ல விடாமல் தடுத்தான். தனது அம்மா தெருவில் கிடப்பதைப் பார்த்த நைனா ஷெரு கானை பல முறை அறைந்தாள். திடீரென்று அவன் அவளைக் கத்தியால் குத்தி விட்டான்‌. முதலில் கழுத்து, அடிவயிறு பின்னர் பிற பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினான். அதன்பிறகு தனது இரு கூட்டாளிகளுடன் பைக்கில் தப்பி ஓடி விட்டான்.“ என்று பல்தேவ் சிங் கூறியுள்ளார்.

பைக்கில் வந்த மூவருடன் ஏற்பட்ட சண்டையில் நைனாவின் அம்மா குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷெரு கானின் முகத்திரையைக் கிழித்து அவனை அடையாளம் கண்டுள்ளார். சுந்தர் நகரி பகுதியில் வசித்து வரும் 22 வயதான ஷெரு கான் பள்ளிப் பருவத்தில் இருந்தே நைனாவைக் காதலித்து வந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஜனவரி மாதம் திருமண நாள் குறிக்கப்பட்ட நிலையில் நைனா மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவரது உறவினர் விக்கி கூறியுள்ளார். ரெஸ்டாரன்ட் உரிமையாளரான நைனாவின் வருங்காலக் கணவர் நாக்பூரில் வசித்து வரும் நிலையில் திருமணத்துக்காக 25 பேர் அங்கே செல்லவிருந்த தாகவும் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் தன் கணவருக்கும் சேர்த்தே ஷாப்பிங் செய்த நைனாவின் நிலை இப்படி ஆனதைக் குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

OpIndia வெளியிட்ட செய்தியின் படி ஷெரு கான் தனது மகளுடன் ஒன்றாக கணிணி பயின்றதாக பல்தேவ்சிங் கூறியுள்ளார். அடிக்கடி நைனாவை தொல்லை செய்து வந்த ஷெரு கான் அவரைத் திருமணம் செய்து கொள்ள‌ விரும்பியதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பு கூட வீட்டிற்கு வந்து தனது மகளை அச்சுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

முதலில் ஷெரு கான் தப்பித்து விட்ட நிலையில் அவனுக்கு உதவி செய்த ஆசிப் மற்றும் ஆமீர் சௌத்ரியை மட்டுமே கைது செய்த காவல்துறை சில நாட்களுக்குப் பின் காசியாபாத்தில் வைத்து அவனையும் கைது செய்தது. அப்போது ஷெரு கான் ஒரு டிக் டாக் பிரபலம் என்பதும் தான் திருமணம் செய்துகொள்ள விரும்பிய பெண் மற்றொருவரை திருமணம் செய்துகொள்ள இருந்ததால் கொலை செய்ததும் தெரிய வந்தது.

பெண்களை பின் தொடரும் பழக்கம் சமூகத்தில் பொதுவாகவே அதிகரித்து தான் வருகிறது என்றாலும் முஸ்லிமல்லாத பெண்கள் முஸ்லிம் ஆண்களால் அவர்களது உறவு முறிந்த பின்னர் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் வெகு சாதாரணமாகிவிட்டது.

இதற்கு முக்கியமான காரணம் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகள் பிறமத பெண்களை வெறும் போகப் பொருளாகவும் பாலியல் அத்துமீறல், கட்டாய மதமாற்றம், மற்றும் திருமணத்திற்கான இலக்குகளாகவும் மட்டுமே பார்க்கும்படி முஸ்லிம் ஆண்களை மூளைச்சலவை செய்வது தான். பல சம்பவங்களிலும் முஸ்லிம் ஆண்கள் பிற‌மத பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் போது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களும் கூட அதற்கு உதவிகரமாக செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. பாலிவுட் படங்களும் பல முறை எச்சரித்த பின்னும் பெண்களை அவர்களது விருப்பத்திற்கு எதிராக பின் தொடர்வதை காதல் என்ற பெயரில் சாதாரணமான விஷயமாக ஆக்கி விடுகின்றன.

கடந்த இது 2017ஆம் ஆண்டு விமான பணிப்பெண்ணாக பயிற்சி பெற்று வந்த 21 வயது ரியா கௌதம், முகமது அடில் என்ற உள்ளூரில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவனால் பல மாதங்களுக்கு பின் தொடரப்பட்டு, இறுதியில் ஒரு நாள் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நைனா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அருகிலுள்ள மற்றொரு இடத்தில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டிலேயே மற்றொரு சம்பவத்தில் ஆர்த்தி சர்மா என்ற கல்லூரி மாணவி அவருடைய முன்னாள் ஆண் நண்பர் அஜ்மல் ஷாவால் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார். 2018ல் வாழைப்பழம் விற்று வந்த அப்துல் சமத் என்பவன் தன்னுடன் ஊர்சுற்ற மறுத்ததற்காக மது என்ற செகந்திராபாத் தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை கொலை செய்தான். கடந்த வருடம் முனாசிர் அகமது என்பவன் 20 வயது ப்ரீத்தி மாத்தூரை குத்திக் கொன்றான். நைனா கொலை வழக்கு குற்றவாளியான ஷெரு கான் வசித்து வரும் சுந்தர் நகரி, கிழக்கு மற்றும் தலைநகரை ஒட்டிய டெல்லி நகரின் பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்து வருவதால் இந்துக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் பகுதிகளுள் ஒன்றாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் டெல்லியில் வன்முறையாக மாறிய போது மத்திய உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது ஹசீன் குரேஷியும் சுந்தர் நகரி பகுதியில் தான் வசித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? நாங்கள் ஒரு இலாப நோக்கற்றவர். நன்கொடை அளித்து, எங்கள் பத்திரிகைக்கு பணம் செலுத்த உதவுங்கள்.

இந்து போஸ்ட் இப்போது டெலிகிராமில் உள்ளது. இந்து சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த சிறந்த அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு, தந்தி மீது இந்து போஸ்டுக்கு குழுசேரவும்.

Subscribe to our channels on Telegram &  YouTube. Follow us on Twitter and Facebook

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Sign up to receive HinduPost content in your inbox
Select list(s):

We don’t spam! Read our privacy policy for more info.