ராமாயணப் பழமொழிகள்

தமிழர் வாழ்க்கையில் ராமாயணம் ஒரு கதையாக மட்டுமல்ல, ஒரு வாழ்வியல் நெறியாகவும் நிலைத்து நிற்கிறது. ராமன், சீதா, ராவணன் போன்ற பாத்திரங்கள், நற்பண்புகள் மற்றும் தீய குணங்களின் அடையாளங்களாக தமிழர் மனதில் பதிந்துள்ளன. இதன் தாக்கம் அவர்களின் அன்றாட பேச்சு வழக்கிலும் வெளிப்படுகிறது; அதற்குச் சிறந்த சான்றாக பல பழமொழிகள் உள்ளன. தமிழர்கள் ராமாயணத்தில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் இவற்றின் மூலம் வெளிப்படுகிறது.

இந்தப் பழமொழிகள் வெறும் சொற்றொடர்கள் அல்ல; அவை வாழ்க்கை அனுபவம், ஒழுக்கம், சமூகவியல் சிந்தனை ஆகியவற்றை சுருக்கமாக எடுத்துரைக்கும் ஞானக் கூறுகள். குறிப்பாக, ராமனின் நற்பண்புகள் இவற்றில் தெளிவாக பிரதிபலிக்கின்றன. “ராமன் வாக்குக்கு இரண்டு உண்டோ?” என்ற பழமொழி, அவர் சொன்னதை ஒருபோதும் மீறாத நேர்மையும் உறுதியும் கொண்டவராக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. “ராமன் உள்ள இடம் அயோத்தி” என்பது அவர் இருந்த இடமே தர்மம் நிறைந்த புனித நிலம் என்பதைக் குறிக்கிறது.

மேலும், ராமனின் தலைமைத் திறனும் மனிதநேயமும் பல பழமொழிகளில் வெளிப்படுகின்றன. “ராமனைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகனும் இருப்பான்” என்பது, நல்ல தலைவராக இருந்ததால் அவருக்கு உண்மையான, அர்ப்பணிப்பான துணைவர்கள் கிடைத்தார்கள் என்பதைக் காட்டுகிறது. “மரியாதை ராமன் வழக்குத் தீர்த்தாற் போல” என்றது, அவர் நீதியுடனும் மரியாதையுடனும் முடிவுகளை எடுத்தார் என்பதை எடுத்துரைக்கிறது.

மேலும், “விடிய விடிய கதைக் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா” என்ற பழமொழி, ஒரே விஷயத்தை பலமுறை கேட்டாலும் தவறாகப் புரிந்து கொள்ளும் மனித இயல்பை வெளிப்படுத்துகிறது. “ராமேஸ்வரத்துக்கு போகும்போது பாம்பனாறு குறுக்கிட்டது போல” என்றது, வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை எடுத்துரைக்கும் ஒரு உருவகமாக உள்ளது.

ராமனின் வாழ்க்கை ஒரு ஒழுக்க நெறியாக தமிழர் மனதில் பதிந்துள்ளது. அவர் தர்மம், உண்மை, கடமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியவர். இதனால், அவரை மையமாகக் கொண்ட பழமொழிகள் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளன. இந்தப் பழமொழிகள் மூலம், நல்லொழுக்கம் என்பது வெறும் கோட்பாடு அல்ல; நடைமுறையில் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும் என்பதும் தெளிவாகிறது.

மேலும், இந்தப் பழமொழிகள் தமிழர் அறிவின் கூர்மையையும் காட்டுகின்றன. ஒவ்வொரு மனித குணத்திற்கும் ஒரு ராமாயணம் சார்ந்த உருவகம் பயன்படுத்தப்படுகிறது. நல்லவன் என்றால் ராமன், கெட்டவன் என்றால் ராவணன், நேர்மை என்றால் ராமன் வாக்கு என வாழ்க்கையை புரிந்து கொள்ள எளிய வடிவில் இவை உதவுகின்றன.

பழமொழிகள் – அட்டவணை

எண்பழமொழிபொருள்
1விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாநீண்ட நேரம் கேட்டாலும், விஷயத்தை தவறாகப் புரிந்து கொள்வது.
2ராமன் உள்ள இடம் அயோத்திநல்லவர் இருக்கும் இடமே நல்ல இடம்.
3ராமன் ஆண்டாள் என்ன ராவணன் ஆண்டாள் என்னநல்லவன் ஆட்சி செய்தாலும் கெட்டவன் ஆட்சி செய்தாலும் மாற்றம் தெரியாத நிலை
4படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்நல்லதைப் படித்தும் செயல்களில் அதற்கு மாறாக நடப்பது.
5உள்ளங்கை நெல்லிக்கனி போல்மிகவும் தெளிவாக, வெளிப்படையாக இருப்பது
6ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.இப்பிறவியில் மற்றொரு பெண்ணை கூட நான் தொடமாட்டேன் — இது ராமனால் (கம்ப இராமாயணம்) எடுத்த சபதம்.”
7ராமன் வாக்குக்கு இரண்டு உண்டோ?நல்லவர் சொன்னது ஒரே சொல்; அது மாறாது
8ராமனைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகனும் இருப்பான்நல்ல தலைவருக்கு நல்ல பணியாளர்கள் இருப்பார்கள்
9ராமஸ்வாமி சகாயம், வயிறு வளர்ப்பது உபாயம்ராமபக்தரின் உதவி நல்லது, ஆனால் வயிறு நிரப்புவது (உணவு) முதல் உபாயம்—ஆன்மீகம் உடல் தேவையை மீறாது.
10ராமாமிர்தமே ஜீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?உயர்ந்ததை நினைத்துக் கொண்டு அடிப்படை தேவைகளை மறக்கக் கூடாது
11ராமாயணம் ரங்கு: பாரதம் பொங்குஇராமாயணம அழகாக (ரங்கு=நிறம்) இருக்கு; மகாபாரதம் கொந்தளிப்பாக (பொங்கு) இருக்கு—இராமாயணம்- மகாபாரதம ஒப்பீடு.
12ராமாயணம் வண்ட புராணம்; பாரதம் பண்ட புராணம்ராமாயணம் திரேதாயுகத்தில் நிகழ்ந்தது; மகாபாரதம் துவபராயுகத்தில் நிகழ்ந்தது
13ராமேசுவரத்துக்குப் போகும்போது பாம்பனாறு குறுக்கிட்டாற் போலஒரு வேலை செய்யும்போது இடையில் தடைகள் வருவது
14சாமேசுவரத்துக்கும் காசிக்கும் போயும் பிடித்த சனிசுவரன் தொலையவில்லைஎவ்வளவு முயன்றாலும் துரதிருஷ்டம் விடாமல் தொடர்வது.
15ராமேசுவரம் போனாலும் சனிசுவரன் பின்னோடேபிரச்சினைகள் எங்கு சென்றாலும் விடாமல் வருவது
16ராவண சந்நியாசிவெளியே நல்லவனாக நடித்து உள்ளே கெட்டவனாக இருப்பவர்
17ராவணன் குடிக்கு மகோதரன் போலும்; சுயோதனன் குடிக்குச் சகுனி போலும்கெட்டவர்களுக்கு கெட்ட நண்பர்கள் தான் சேர்வார்கள்
18இரவில் கேட்ட இராமாயணம் ஓர் ஆள் பாரம்கேட்ட விஷயம் மனதில் நிலைக்காமல் போவது
19வனத்துக்கு வால்மீகி; பேருக்கு வியாசர்பெயருக்கு மட்டும் நம்பிக்கை வைக்க கூடாது; செயல் முக்கியம் என்று உணர்த்துகிறது
20ராம பாணம் பட்டு உருவினாற் போலகடுமையாக தாக்கம் ஏற்படுவது
21ராம பாணமே பாணம்; அது எங்கே போச்சுதோ காணோம்முக்கியமானது காணாமல் போய்விடுவது.
22ராமன் மங்கையோடு இணங்கியது அவம்இராமனுடைய மங்கை சீதை. அவளுடன் இராவணன் வாழ நினைத்தது தவறு
23மரியாதை ராமன் வழக்குத் தீர்த்தாற் போலநியாயமாகவும் மரியாதையுடனும் தீர்வு காண்பது
24தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)இராமனுக்கு பெரிய பலம் அவன் தம்பி லெட்சுமணன். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராம லெட்சுமணர்கள்.
25இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறதுஇராம,லெட்சுமணன்—ஆகிய இருவரும் இணை பிரியாத ஜோடிகள். எல்லா படங்களிலும் இதைக் காணலாம். அவர்கள் ஒற்றுமையை உவமையாக கூறும் போது, இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது என்று சொல்லுவர்

முடிவு:

இந்தப் பழமொழிகள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, தமிழர் ராமாயணத்தை வெறும் கதை என அல்லாமல் பக்தியுடன் கற்று, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியுள்னர் என்பதை தெளிவாக காட்டுகின்றன. அந்த வாழ்வியல் அனுபவமே இவ்வளவு பல பழமொழிகளாக உருவெடுத்து, இன்று வரை அன்றாட பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Subscribe to our channels on WhatsApp, Telegram &  YouTube. Follow us on Twitter and Facebook

Related Articles

G Prasanna Venkatesan
G Prasanna Venkatesan
G. Prasanna Venkatesan writes on Bharathiya knowledge, Sri Vaishnavism, Puranic and Ithihasa themes, and stories centered on national and social development.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Sign up to receive HinduPost content in your inbox
Select list(s):

We don’t spam! Read our privacy policy for more info.